Thursday, September 19, 2013

தனிமையில் பேசுகிறாய்!(செல்பேசி)2




இந்த செல்பேசி எந்த விசயத்தையும் எளிதாக்கி விடுகிறது.காதல், கள்ளக்காதல், பொருந்தாத காதல்,பள்ளி வயதில் காதல்.எல்லாம் சாத்தியப்படுகிறது.ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என்று எழுதி வைத்து காதலி வரும் வழியில் காத்திருந்து ,அப்படி அவ்ள் வரும்போது அவள் பார்வையில் படும்படி கடிதம் தூக்கிப்போட்டு அதை அவள் அலட்சியப்படுத்தி சென்றுவிட (அதில் ஐ லவ் யூ என்றுதான் எழுதியிருக்கும் என தெரியாதா? என்ன)வேதனயின் உச்சத்தில் நாயர் கடையில் டீயொடு தம்மும் அடிக்கிற இளைஞன் இன்றில்லை.
விரும்பும் பெண்ணின் செல்பேசி எண்ணை கைப்பற்றி துணிவாய் பேசி சம்மதிக்க வைத்து,சந்திக்க நேரம் குறித்து , காதலும், காமமும் எளிதாகி விட்டது.அந்த செல்லிலெயே இன்டர்னெட்,ஆபாச வீடியோக்கள்,இருவரும் இணைந்தே பார்க்க பஞ்சும், நெருப்பும்,விரும்பியே உரசிப்பார்க்கிறது.(பேசலாம்) 
உங்கள் கருத்துக்களையும் பகிருஙகள் நண்பர்களே!

Wednesday, September 18, 2013

தனிமையில் பேசுகிறாய்!(செல்பேசி)

இருபது வருடஙளுக்கு முன்னதாக ஒருவர் தனியாக பேசிக்கொண்டிருந்தால் ஏதோ கீழ்ப்பாக்கம் அனுப்பவேண்டிய ஒருமாதிரியான ஆள் என்று சொல்வார்கள்.ஆனால்,ஏறத்தாழ 90% இளைஞர்கள், யுவதிகள் இப்படித்தான் காற்றில் கைகளை அலையவிட்டுக்கொண்டு தலையை கோதிக்கொண்டே ஏதொவொரு மரத்தின் கீழே அல்லது வெறுமையான நிழலில்லாத இடத்திலும் அல்லது,போக்குவரத்து நெரிசலான இடத்தில் நடந்து கொண்டும் அல்லது,பேருந்தில் , மின்சார ரயிலில் படியில் நின்று கொண்டும் கூட அல்லது,உணவருந்தும்போது,குளியலறையில்,கழிப்பறையில் எங்கும் தன்னை மறந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
தொடரும்.........